arulvakku

ஆகஸ்ட் 26

இன்றைய நற்செய்தி:

மத்தேயு.23:27-32

" மூதாதையர் மரபு "

அருள்மொழி:

‘இவ்வாறு நீங்கள் இறைவாக்கினரைக் கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்'.
மத்தேயு 23:31

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இறைவாக்கு உரைத்தவர்களை ஒரு பொருட்டாக நினைக்காத நெறிக் கெட்ட மூதாதையர் வழித் தோன்றியவர்களைச் சாடுகின்றார். காரணம் அவர்கள் நேர்மையாளரை நீதிக்குக் குரல் கொடுத்தவர்களைக் கொன்றார்கள். அதே பாதையில் தான் நீங்களும் பயணிக்கின்றீர்கள் என்று கூறுகின்றார் இறைமகன். எனவே நாம் நீதிக்காகவும் நேர்மைக்காகவும் உழைக்கும் வர்க்கத்தினரை வளர்த்தெடுப்போம். உழைக்காது உண்பவர்களைக் களைந்தெறிவோம். நாட்டில் எங்கும் அமைதியை நிலை நாட்டுவோம். இதையே இயேசு விரும்புகின்றார். இறைப் பிரசன்னத்தில் பிள்ளைகளை வளர்த்திடுவோம். அன்பின் வழியைப் பின்பற்றுவோம்.

சுயஆய்வு :

  1. நான் என் அருகிலிருப்பவரை நேசிக்கின்றேனா?
  2. பகைமை உணர்வைத் தவிர்த்து அன்புச் செய்கின்றேனா?

இறை வேண்டல்:


www.anbinmadal.org