arulvakku

ஆகஸ்ட் 25

இன்றைய நற்செய்தி:

மத்தேயு.23:23-26

" முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். "

அருள்மொழி:

‘குருட்டுப் பரிசேயரே, முதலில் கிண்ணத்தின் உட்புறத்தைத் தூய்மையாக்குங்கள். அப்பொழுது அதன் வெளிபுறமும் தூய்மையாகும்'.
மத்தேயு 23:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு குருட்டுப் பரிசேயரே என்று அவர்களைச் சாடுகின்றார். காரணம் அவர்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக உள்ளார்கள். அவர்கள் வெளித் தோற்றத்தில் தூய்மையாக இருந்தாலும் அவர்களது அகமோ சாக்கடைப் போன்று அசுத்தம் நிறைந்த ஊற்றாக உள்ளது. அதை முதலில் அவர்கள் அகற்ற முடியாமல் வெளித் தோற்றத்தில் இருப்பது வெறும் பதரே! எதற்கும் உதவாத நிலையில் அவர்களது ஆன்மா உள்ளது. அன்புடையவர்களே, நாம் இன்றைய சூழலில் அகத்தைத் தூய்மையாக்குவோம். பிறகு புறம் தானே தூய்மைப் பெறும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்ற பழமொழிகேற்ப வாழ்வோம்.

சுயஆய்வு :

  1. நான் வெளித்தோற்றத்தில் எந்த நிலையில் என் மனம் உள்ளது?
  2. அகத்தைக் காண என் முயற்சி என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! என் வாழ்வுத் தெளிந்த நீரோடையாகத் திகழ வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org