arulvakku

ஆகஸ்ட் 13

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 18:21-19:1

" சகோதரன் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிடில் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் "

அருள்மொழி:

'உங்கள் ஒவ்வொருவரும் தம் சகோதரன் சகோதரிகளை மனமாற மன்னிக்காவிடில் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்'
மத்தேயு 18:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, நாம் பிறர் குற்றங்களை எவ்வாறு மன்னிக்க வேண்டும் என்பதற்கு உவமை வழியாக நமக்குக் கூறுகின்றார். எனவே நாம் அடுத்தவர் தவறு செய்தால் அவரை எந்த நிலையிலும் ஏற்று மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்பொழுதுத் தான் நமது குற்றங்களை இறைவன் மன்னிப்பார் என்று உவமை மூலமாகவும், கர்த்தர் கற்பித்த செயத்தின் வாயிலாகவும் நமக்குக் கற்பிக்கின்றார். இதுதான் நியதி. சகோதர-சகோதரிகள் என்பது உடன் பிறந்தவர்கள் மட்டுமல்ல, மனித இனம் அனைத்துமே இறைஅன்பில் ஒன்றே. எனவே நாம் இங்கு எதையெல்லாம் செய்கின்றோமோ, அங்கு அதற்கெல்லாம் பிரதிபலன் கிடைக்கும் என்பதை உணர்த்துகின்றார்.

சுயஆய்வு :

  1. நான் அடுத்தவரின் குறைகளை மன்னித்து ஏற்கின்றேனா?
  2. உறவுகளைக் கடந்து சென்று மன்னிக்கின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! ஏற்றத் தாழ்வில்லா மனதினை நல்கிச் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org