arulvakku

ஆகஸ்ட் 09

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 14:22-33

" நம்பிக்கைக் குறைவு "

அருள்மொழி:

‘இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, நம்பிக்கைக் குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார்.
மத்தேயு 14:31

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, புனித பேதுருவின் நம்பிக்கையைப் பரிசோதிக்கின்றார். இயேசு கடல் மீது நடப்பதைக் கண்ட இந்தப் பேதுரு புயல் வீசவே அச்சம் கொண்டவராய் ஆண்டவரை நோக்கிக் கூவியதால் அங்கே குறை விசுவாசத்தைக் காண்கின்றார். ஆம் இறை மக்களே, நமது விசுவாசம் ஆழ்ந்த விசுவாசமாக இருக்க வேண்டும். என் இயேசு என்னில் இருக்கும் போது எனக்கு ஏன் பயம் என்ற கொள்கையோடு அவரது வார்த்தைகளை வாழ்வாக்குவதில் நாம் ஒரே சிந்தனை உடையவர்களாய் செயல்பட வேண்டும். நாம் என்றும் அவரில் நம்பிக்கைக் கொண்டு அவரோடு வாழ உறுதிக் கொள்வோம். அவர் பாதம் சரண் அடைவோம்.

சுயஆய்வு :

  1. என் விசுவாசம் எப்படி உள்ளது?
  2. அதை ஆழப்படுத்த என் முயற்சி என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நீர் என்றும் என்னோடு இருக்கின்றீர் என்ற நம்பிக்கை என்னுள் பதித்தருளும். ஆமென்.


www.anbinmadal.org