arulvakku

ஆகஸ்ட் 1

இன்றைய நற்செய்தி:

மத்தேயு14:1-12

" குற்றம் குற்றமே "

அருள்மொழி:

ஏனெனில் யோவான் அவனிடம் “நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல” என்று சொல்லி வந்தார்.
மத்தேயு 14:4

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் ஏரோதியாளைச் சுட்டிக் காட்டி ஏரோதிடம் நீ செய்வது முறையல்ல என்று நீதிக்காக அஞ்சா நெஞ்சத்துடன் சுட்டிக் காட்டுகின்றார். இங்கே தன் கணவனைத் தவிர அடுத்தவர் யாரையும் இச்சையுடன் பார்க்கக் கூடாது, உறவு கொள்ளக்கூடாது என்பதை உறுதியாகக் கூறுகின்றார். ஆம் சகோதரர்களே! எந்த வேளையிலும் உண்மை, நீதியை நிலை நாட்ட நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்குத் திருமுழுக்கு யோவான் இறைவனால் அனுப்பப்பட்ட முன்னோடி. எப்படியெனில் கரடு முரடான பாதைகளைச் சமன்படுத்தவே இயேசுவுக்கு முன்னோடியாக வந்தார். எனவே, நாமும் நீதிக்குக் குரல் கொடுக்கும் செயல் வீரர்களாவோம்.

சுயஆய்வு :

  1. நான் தெரிந்துத் தவறு செய்கின்றேனா?
  2. அல்லது செய்தத் தவறை உணர்ந்து நீதிக்காகப் போராடுகின்றேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! நீர் என்னை உம் அன்புப் பணிக்காகத் தேர்வு செய்து யோவானைப் போல நானும் உம் மக்களின் பாதையை வளப்படுத்தும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org