அருள்வாக்கு இன்று ++ arulvakku-24

ஆகஸ்ட், 24 - வெள்ளி
இன்றைய நற்செய்தி:

யோவான் 1: 45-51

“இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்”

அருள்மொழி

இயேசு, “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” என்று நத்தானியேலைக் குறித்துக் கூறுகிறார்.
மத்தேயு 12: 47

வார்த்தை வாழ்வாக:

இறைவன் நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார். அதனால்தான் நத்தானியேலைக் கபடமற்றவர் எனத் தெரிந்து வைத்துள்ளார். அவர் ஒளிவு மறைவு ஏதுமின்றி எதார்த்தமாகப் பேசினார். இன்றைய சமுதாயத்தில் நல்ல பெயர் எடுக்க வேண்டும்; பதவியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர் செய்வது தவறு என்றாலும், சொல்வது பொய் என்றாலும் அவருக்குத் துணை போகின்றோம்.

சுயஆய்வு :

  1. இயேசு இன்று என்னைப் பார்த்தால் என்ன சொல்வார்?

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! உண்மையை உள்ளபடி உரைக்கும் தைரியத்தை நாங்கள் பெற்றிட வரம் தாரும்.ஆமென்.


www.anbinmadal.org