அருள்வாக்கு இன்று / arulvakku-15

ஆகஸ்ட், 15 - புதன்
புனித கன்னி மரியாவின் விண்ணேற்றப் பெருவிழா
இந்தியாவின் சுதந்திர நாள்
இன்றைய நற்செய்தி

லூக்கா 1: 39-56

“என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது”

அருள்மொழி :

மரியா, "ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கிறது" என்றார்.
மாற் 6:11

வார்த்தை வாழ்வாக:

இன்று நமது இந்தியத் திருநாட்டின் சுதந்திர தினம். எவ்வளவோ கஷ்டங்களுக்கும், இடர்பாடுகளுக்கும் இடையில்தான் கிடைத்தது இந்தச் சுதந்திரம். அதேபோல், மரியன்னை தாங்கிய கஷ்டங்கள், வஞ்சக வார்த்தைகள், வசைமொழிகள் ஏராளம். இவை அனைத்தையும் தாங்கி, விடுதலை நாயகியாக உடலோடும் ஆன்மாவோடும் வானக மகிமைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விண்ணக - மண்ணக அரசியாகத் திகழ்கிறார். கஷ்டம் என்பது வாழ்வில் வெற்றியடையக் கொடுக்கப்படும் வாய்ப்புகள். பயன்படுத்துவோம் வாய்ப்புகளை - வாழ்வில் வெற்றி பெறுவோம்.

சுயஆய்வு:

  1. நாம் இறந்தால் நிச்சயம் விண்ணகத்திற்குச் செல்வோமா?

இறைவேண்டல்:

வாழ்வின் இறைவா! அன்னை மரியாள் போன்று மீட்புப் பாதையில் நடந்து, இறந்தபின் வான் வீட்டை அடைய வரம் தாரும்.


www.anbinmadal.org