அருள்வாக்கு இன்று ++ arulvakku-6

ஆகஸ்ட், 6 - திங்கள்
ஆண்டவருடைய தோற்ற மாற்றம் விழா
இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:2-9

“மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது.”

அருள்மொழி :

மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவருக்குச் செவி சாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.

வார்த்தை வாழ்வாக:

இயேசுவின் உருமாற்ற நிகழ்வு, உண்மையில் நம் மனமாற்றத்திற்கான அவசியத்தை எடுத்துச் சொல்கிறது. மனித சிந்தனைகள் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது. பல நேரங்களில் இந்த எதிர்பார்ப்பு, எதார்த்தமான உண்மையிலிருந்து தொலைவில் இருப்பதால், எதார்த்தமான உண்மையைச் சந்திக்கும்போது ஏமாற்றத்தைக் கொண்டு வருகிறது. இயேசுவின் புதுமைகள், மக்கள் கூட்டத்தைக் கூட்டியது. அவரின் பெயரும் புகழும் உயர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால் இந்த உருமாற்ற நிகழ்வு, ஒரு திருப்பு முனையாக அமைகிறது. புகழ் என்ற சிம்மாசனத்தை விட்டு இறக்கி, இனி சவால்களைச் சந்திக்க இருக்கிறது. அனைவராலும் உதறித் தள்ளப்பட்டு, சிலுவை மட்டும் தன்னைத் தாழ்த்த இருக்கிறது. அதுதான் எதார்த்தமான உண்மை . அதுதான் இறைத் திட்டம்.

சுயஆய்வு:

  1. என்ன வாழ்க்கை இது? எங்கே சென்றால் நிம்மதி கிடைக்கும்? பல்வேறு விதமான வாய்ப்பு, வசதிகள் என்றும், பெயர், புகழ் என்றும், முன்னேறுகின்றோமா? கற்பனை உலகிலே எப்போதும் பறந்து கொண்டுதானே இருக்கிறோம்.

இறை வேண்டல்:

வாழ்வின் இறைவா! எதார்த்தங்களை எதிர்கொண்டு வாழவும், இறைவன் திட்டத்தை ஏற்று வளரவும் வரம் தாரும்.


www.anbinmadal.org