அருள்வாக்கு இன்று|arulvakku-4

ஆகஸ்ட், 4 - சனி
இன்றைய நற்செய்தி

மத்தேயு14: 1-12

"வாழ்வு தரும் உணவு நானே."

அருள்மொழி :

“இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் வல்ல செயல்களை இவர் செய்கிறார்.”

வார்த்தை வாழ்வாக:

பன்றியோடு சேர்ந்த கன்றும் பன்றியாகும் என்பார்கள். ஏரோது நல்லவன்தான். ஆனால் அவனைச் சுற்றி இருந்தவர்கள் சரியில்லை . தேவையற்ற நட்பும், உறவும், சுற்றமும் எந்த அளவுக்கு ஒருவனைக் கொலைகாரனாக மாற்றும் என்பதற்கு ஏரோது சிறந்த எடுத்துக்காட்டு. இன்று நம்மைச் சுற்றி எண்ணற்ற சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள் - தேவைப்பட்டால் மனிதனையே ஒரு பொருளாகப் பயன்படுத்துபவர்கள் பலர் உள்ளார்கள்.

சுயஆய்வு :

  1. எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகள்தான் மண்ணில் பிறக்கையிலே. ஆனால்...?

இறைவேண்டல்:

வாழ்வின் இறைவா! மனிதனை ஒரு பொருளாக அடையாளப்படுத்துபவர்களை அடையாளம் கண்டு, அறவே அகற்ற வரம் தாரும்.


www.anbinmadal.org