அருள்வாக்கு இன்று

ஜூலை 31-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:44-46

இன்றைய புனிதர்


புனித லொயோலா இஞ்ஞாசியர்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். மத்தேயு 13:44

வார்த்தை வாழ்வாக:

இயேசு உவமைகள் வழியாக விண்ணரசாகிய புதையலை நமக்கு உணர்த்துகின்றார். எப்படி எனில் அழிவற்ற செல்வமாகிய இறைவார்த்தை என்றும், எங்கும் எந்நிலையிலும் உயிரோட்டமுள்ளது. அது கூர்மையான வாள் போன்றது. எப்பேர்பட்டவராயினும் அதன் பொருளை, அழியாக் கருவை அழித்து விட்டால் , இவ்வுலகத்தில் பொதிந்துள்ள அழியக்கூடியனைத்தும் தன்பொருள், சுகபோகம் ஏன் இவ்வுலக வாழ்வே உயிரற்ற ஜடமாகிவிடும். எனவே தான் இயேசு விவிலியத்தில் பொதிந்துள்ள மேலான மகிழ்ச்சியான, உன்னதமான இறைவார்த்தைகளை இவ்வுலகில் நாம் அனைவருக்கும் உணர்த்திட, நாம் அதைப் படித்து, தியானித்து மற்றவருக்கு உயிர் மூச்சாகும் போது 'புதையல்" ஆக நாம் மாறுவோம்.

சுயஆய்வு

  1. இன்றைய உலகில் இறைவார்த்தையை நான் சுவைக்கின்றேனா?
  2. சுவைத்தவற்றை ஏழைஎளியவரோடு சுக துக்கங்களில் பகிர்ந்துள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! புதையலாகிய இறைவார்த்தையை உம்மக்கள் இன்றைய சூழல்களுக்கேற்றவாறு மறு வாசிப்புச் செய்து உம் விண்ணரசை இம்மண்ணகம் காண வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு