அருள்வாக்கு இன்று

ஜூலை 30 - செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:36-43

இன்றைய புனிதர்


புனித பீட்டர் கிறிசோலோகா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் மத்தேயு 13:43

வார்த்தை வாழ்வாக:

நிலத்தைப் பண்படுத்தி அதில் நாற்று நட்டு விளைகின்ற பயிர்கள் ஊடே களைகள் தோன்றினால் விதைத்தவர் நிலை என்ன? சற்று பொறுமையோடு இடையே தோன்றிய களைகளைக் களைந்து விட்டு நெற்பயிர்களைப் பாதுகாத்து அதை அறுவடைசெய்வதே நேர்மையாரின் பணியாகும். நிலமாகிய இவ்வுலகில் பயிர்களாகிய மக்களைத் தீயோர் அண்டவிடாமல் இதமாகக் களைந்து தன் மக்களைக் கதிரவனின் ஒளியே போல அவர்களை ஒளிரச் செய்வார். அவர்களே இறையாட்சியின் மக்கள். இத்தகைய மக்களையே தந்தையிடம் கொண்டு சேர்க்க இயேசு நமக்கு அழைப்பு விடுகின்றார்.

சுயஆய்வு

  1. நேர்மையாளராக நாமும் வாழ ஆசிக்கின்றேனா?
  2. நேர்மையாளன் யார் என்பதை உணர்ந்துக்கொண்டேனா?

இறைவேண்டல்

வானகத் தந்தையே! உமது இரக்கத்தினால் நாங்கள் எங்கள் குறைகளை அறிந்து அவைகளைக் களைந்து உமது மக்களை உமது அரசில் சேர்க்க வரம் அருளும்

அன்பின்மடல் முகப்பு