அருள்வாக்கு இன்று

ஜூலை 29-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:31-35

இன்றைய புனிதர்


புனித மார்த்தா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். மத்.13:31-32

வார்த்தை வாழ்வாக:

இயேசு உவமைகளைக் கொண்டு பேசினார். இயற்கையை வெகுவாகப் பயன்படுத்தனார். சமுதாயத்தில் வெளிப்படையாக வாழும் பெரும் புள்ளிகள் அல்ல பெரியவர். மனிதச் சமுதாயத்திற்காக உழைப்பவரே பெரியவர். அவர் வசதியால் குறைந்தவராக இருப்பினும் மனதினால் உயர்ந்து நிற்கின்றர். கடுகு விதையைப் போன்று உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மற்றவருக்கு உதவுவதில் ஆலமரத்தைப் போன்று பரந்த உயரியச் சிந்தனைகளைப் பரப்புவதில் தீவிரமாய் இருப்பவரையே, இயேசு கடுகு விதை மரமாகி உதவுவதைக் குறிப்பிடுகின்றார். செய்திச் சிறியதாக இருந்தாலும் நல்லவர்கள் வாழும் ஓர் இறைசமுகமாகும் என்பதே அவர் கூற்று.

சுயஆய்வு

  1. நான் கடுகு விதையைப் போல் மற்றவர்க்குப் பயன் தரும் மரமாக மாறுகிறேனா?
  2. இறையரசின் உயரியச் சிந்தனைகளை உணர்ந்துள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! கடுகு விதையைப்போன்ற சிறியவனாக நான் இருந்தாலும் உம் பணியை உம் சிந்தனையோடு இணைந்துப் பணியாற்றும் போது பெரியவனாக உம் மதீப்பிட்டீற்கு என்னையும் மாற்றும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு