அருள்வாக்கு இன்று

ஜூலை 27- சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:24-30

இன்றைய புனிதர்


புனித பத்தாலியோன்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் மத்தேயு13:30

வார்த்தை வாழ்வாக:

நாம் வாழ்கின்ற இவ்வுலகில் பல நல்லவர்களும் உண்டு. பல தீய எண்ணம் கொண்டவர்களும் உண்டு. ஆனால் தீயோர் நட்பை பலுகிபெருகி மற்றவரை அழித்தாவது தன் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். எனவே இவ்வுலகம் நிலையானது நாம் சேமிக்கும் அனைத்தும் நிலையானது என்ற மமதையில் வாழ்கின்றனர். இவ்வுலக செல்வ செழிப்பை நாடுபவர்களே களைகளுக்கு சமம். நீதி நேர்மை என்ற பாதையில் வாழ்கின்றவர்களே கோதுமை மணிகளுக்கு ஒப்பானவர்கள். இத்தகையோரைப் பார்த்து தான் இயேசு நல்ல கோதுமை மணிகளை களஞ்சியமாகிய தன் அரசில் சேர்க்க அழைப்பு விடுக்கின்றார். இவ்வுலக செல்வசெழிப்பில் வாழும் போது நல்லவைகளை நாம் இனம் காண்பதில்லை, எப்படிஎனில் களைகளாக வளர்ந்துள்ள நம் செருக்கு அன்பின் கருவூலமாகிய கோதுமை மணிகளை இனம் காண்பதில்லை. எனவே களைகளை எரித்து விடுத்து விடுங்கள் என்கிறார் இயேசு.

சுயஆய்வு

  1. நான் நல்ல கோதுமைமணியைப் போல் களஞ்சியத்தில் சேர்க்க விரும்புகின்றேனா?
  2. களைகளாக சமுதாயத்தில் வளம் வருபவை எவை என அறிந்துள்ளேனா?

இறைவேண்டல்

களைகளை களைந்து நல்கோதுமை மணிகளாக எம்மை அழைக்கும் இயேசுவே! உம் களஞ்சியத்தில் நானும் வந்து சேர இச்சமுதாயத்தில் நான் ஊடுருவ மனம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு