அருள்வாக்கு இன்று

ஜூலை 26-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13:18-23

இன்றைய புனிதர்


புனிதர்கள் சுவக்கின், அன்னாள்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்து கொள்வார்கள். மத்தேயு13:23

வார்த்தை வாழ்வாக:

நாம் எதை விதைக்கின்றோமோ அதையே ஒன்றுக்கு முப்பது- நூறு மடங்கு அறுவடைச் செய்கின்றோம். எப்படி எனில் நாம் நம்மையே செம்மைப்படுத்திச் சிறந்த பண்பட்ட நிலமாக எவ்விதத் தீயச் செயல்கள், எண்ணங்களின்றி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் நாமும் பண்பட்ட நிலமாக மாறுவோம். அந்நிலையில் தான் நாம் இறைவார்த்தைக் கேட்டு அதன் ஆழாகலமான கருத்துக்களைப் புரிந்து கொண்டு அதப்படிச் செயல்பட முடியும். அப்போது தான் நல்ல நிலமாக மாறுகின்றோம். என்பதை உணர்த்தவே இயேசு நல்ல பண்பட்ட நிலத்தில் விதைப்பட்ட விதைகள் நல்ல பலனைத் தாரும் என்று கூறுகின்றார். நல்ல நிலமாக மாறினால் மட்டும் போதாது. இறைவார்த்தையின் படி நம்மை நாமே சோதனைகள், இடறல்கள் வரும்போது வளைந்து கொடாமல் வாழ்ந்தால் நல்ல நீரைப் பருகி வாழும் செடிக்கு ஒப்பாக மாறுவோம். அப்போது நல்ல விதைகளை நாமும் சமுதாயத்தில் விதைக்க முடியும்.

சுயஆய்வு

  1. என்னையே நான் சீர்தூக்கிப் பார்க்கின்றேனா?
  2. நாகரீகம் என்ற போர்வையில் சிக்கி விடாமல் என்னைக் காத்துக் கொள்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பான இயேசுவே! இச்சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கின்ற இளம்சிறார்களைச் சீர்தூக்கிப் பார்த்து அவர்களைப் பராமரித்துப் பேணிக் காக்கும் நல் மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு