அருள்வாக்கு இன்று

ஜூலை 25-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்.20:20-26

இன்றைய புனிதர்


புனித யாக்கோபு திருத்தூதர்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல. மத்.20:23

வார்த்தை வாழ்வாக:

அன்று செபதேயுவின் மனைவி இயேசுவிடம் அவர், ;நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும் ; என்று வேண்டினார். ஆனால் இயேசு எத்தகைய ஆட்சியில் அமரபோகின்றார் என்று அவர்கள் அறியவில்லை. இயேசுவின் ஆட்சி நீதி, நேர்மை,உண்மை அடங்கிய நீதியரசர் ஆட்சி. இவ்வாட்சியினை அடைய வேண்டுமென்றால் அவ்வுலகில் அனைவரும் பணியாளராகவே பணிபுரிய வேண்டும். எங்கெல்லாம் உண்மை மழுங்கடிக்கபடுகின்றதோ அங்கெல்லாம் ஊடுருவி நீதியை நிலைநாட்ட வேண்டும். எதிர் கொள்ளும் சவால்களை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளும் நிலை பெற்றவராக இருக்க வேண்டும். அத்தகையோரே என் வலப்பக்கதிலும், இடப்பக்கத்திலும் அமரும் தகுதி பெற்றவர். நான் அடையும் துன்பகலத்தையும் அவர்களும் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்

சுயஆய்வு

  1. நான் சமுதாயத்தில் ஊடுருவிச் சென்று பணிபுரியத் தகுதியுள்ளேனா?
  2. எந்த வேலையிலும் இறைசித்தத்தை உணரும் மனம் கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்

என் அன்பு இயேசுவே! உம்மைபோல நானும் மனத்தாழ்ச்சியுடன் பணிபுரியும் பணியாளனாக இருக்க நல்மனதினை தரவேண்டுகின்றேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு