அருள்வாக்கு இன்று

ஜூலை 24-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 13.1-9

இன்றைய புனிதர்


புனித கிறிஸ்தினா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்" என்றார். மத்தேயு 13-9

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இறைவார்த்தைகளின்படி வாழ்வோரை உவமைகளில் சுட்டிக் காட்டுகின்றார். ஏதோ இறைவார்த்தை படித்தோம் கடமை முடிந்தது என்ற நிலை - வாழ்வில் முறையற்ற நெறிகளைக் கடைபிடித்து அதற்கு மன்னிப்புக் கிடைக்கும் என்ற நினைவில் கடமைக்குப் படித்து விடுவோர் சிலர். அவர்களின் பாவங்கள் அவர்களை இருட்டடிப்புச் செய்து அவர்களை இறைப் பிரசன்னத்திற்கு உயர்த்தாத நிலையில் சிலர். இறை வார்த்தைத் தான் வாழ்வு. இதனைப் படித்துச் சிந்தித்துத் தியானித்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவந்து செயல்படுகின்றவர் பண்பட்ட நிலத்திற்கு ஒப்பானார்கள். எப்படி எனில் வார்த்தை வழி வாழ்வு என்பது ஒரு நிலத்தை நன்கு உழுது அதில் உள்ள தீய நச்சுச் செடிகளைக் களைந்துவிட்டுப் பயிர் வளரத் தடையாக உள்ளக் கழிவுகளை அப்புறப்படுத்தி மண்ணிற்கு நன்கு உரமிட்டுப் போடுகின்ற விதை நன்றாக வளர்சதற்குச் சமம். அதனைத் தொடர் பராமரிப்புச் செய்யும்போது அஃது ஒன்றுக்கு முப்பது, நூறு, ஆயிரம் மடங்கு நல்மனதோரில் கலக்கும் என்பதே இதன் கருபொருள்.

சுயஆய்வு

  1. நான் நல்ல விதையாக உள்ளேனா?
  2. எனது மனம் நல் விதைகளை ஏற்றுப் பலன் தரும் நிலையில் உள்ளதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகள் என் வாழ்வுக்கு ஒளி என்பதை உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு