அருள்வாக்கு இன்று

ஜூலை 23-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 12:46-50

இன்றைய புனிதர்


ஸ்வீடன் நாட்டு புனித பிரிஜ்த்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

விண்ணகத்தில் உள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் . மத்தேயு 12:50

வார்த்தை வாழ்வாக:

இங்கே உறவுகளைப் பலப்படுத்துகிறார் இயேசு. எப்படிஎனில் சாத்தனின் பிடியில் சிக்கி நொறுங்குண்டுப் போவதைச் சகிக்காத தந்தை, ஆபிரகாம் முதல் இயேசுகிறிஸ்துவாகிய தன் மகன்வரை தன் மக்களின் துயர்துடைக்க மண்ணுலகம் அனுப்புகின்றார். ஆனால் மனித இனமோ உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை பணக்காரன் என்ற பிளவுகளை உருவாக்கி, தான் படைத்த மக்களையே சிதைப்பது தந்தைக்குப் பிடிக்கவில்லை. எனவே இங்கே பூமியின் ஒருமுனை முதல் மறுமுனை வரையுள்ள மனிதர்கள் அனைவரும் என் மக்களே! ஆனால் சாத்தனின் பிடியில் சிக்கிய மனித இனம் இவ்வுலகில் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றது. இதையே இயேசு என் தந்தையின் விருப்பப்படி வாழும் ஒவ்வொருவரும் என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் என்று குறிப்பிடுகின்றார். இங்கே உறவுகள் இறைவனில் அனைவருக்கும் ஒன்றே என்ற நிலை.

சுயஆய்வு

  1. எங்கெல்லாம் மனித உறவுகள் சிதைக்கப்படுகிறதோ, அங்கே என் நிலை என்ன?
  2. என்னையே நான் யார் என்று உணர்ந்துள்ளேனா?

இறைவேண்டல்

தாயும் தந்தையுமாகிய இறைவா! உம் மக்களாகிய நாங்கள் அனைவரும் எல்லா வேளையிலும் உம் பிள்ளைகளாக வாழும் வரத்தை எங்கள் ஒவ்வொருக்கும் வழங்கி எம்மை ஆட்கொள்ளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு