அருள்வாக்கு இன்று

ஜூலை 21-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:30-34

இன்றைய புனிதர்


பிரிந்திசி புனித லாரன்ஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார்.அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். மாற்கு 6:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு சீடர்கள் பாலைநிலத்திற்குப் புறப்பட்டுச் செல்வதைக் கண்ட மக்கள் கூட்டம் அவர்களைப் பின் தொடர்வதை இயேசு கண்டு மக்கள் ஆயரில்லா ஆடுகளைபோல் அலைமோதுவதைக் கண்டு அவர்கள்மீது பரிவுக் கொண்டார். ஏனேனில் மானிடர் நல்வாழ்வு பெறும் பொருட்டு இறைமகன் மண்ணகம் வந்தார். இங்கே ஏற்றத் தாழ்வுகளும், பிளவுகளும் மேலோங்கி மனிதக் குலத்தைப் பிளவுப்பட்டிருந்ததால் அவா மக்கள்மீது பரிவு கொண்டார். இவ்வாறே நம்மையும் ஒருவர், மற்றவர்மீது அன்பு கொண்டு அறச்செயல்கள் செய்வதன் மூலம் இறையரசை நாம் கட்டி எமுப்ப நாமும் இறைமகனைப் போலப் பரிவு கொள்வோம். வறியோர் வாழ்வு உயர்ந்திட நாம் உழைப்போம். வாரீர்

சுயஆய்வு

  1. வறியோர் வாழ்வு உயர்ந்திட எனது முயற்சி யாது?
  2. ஆயரில்லா ஆடுகளைக் காண்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது பரிவுள்ளம் என்னில் ஊற்றெடுக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு