அருள்வாக்கு இன்று

ஜூலை 20-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 12: 14-21

இன்றைய புனிதர்


புனித அப்பொல்லினாரிஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இவரே என் அன்பர்: இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது: மத்தேயு 12:18

வார்த்தை வாழ்வாக:

இயேசுவின் திருமுழுக்கின் போதும், அவர் உருமாற்றம்போதும், விண்ணகம் சென்றபோதும் வானிலிருந்து தந்தை தன் நெஞ்சம் பூரித்துக் கூறிய வார்த்தைகளை எசாயா இறைவாக்கினர் முன்னறிவிக்கின்றார். இன்றைய நற்செய்தியில் இயேசுவின் பண்புகளைக் காணமுடிகிறது. தமது தந்தை குறித்த நேரம் இன்னும் வராததை உணர்ந்துத் தம்மை ஒழிக்க நினைத்த பரிசேயரிடமிருந்து ஞானத்தோடு விலகிச் செல்கின்றார். தன்னைப் பின்தொடர்ந்தவர்ளைக் குணப்படுத்தினார். தூய ஆவியின் ஆற்றலால் அன்பைப் பொழிந்து அநீதியை அழித்து நீதியை நிலைநாட்டினார். தான் எதற்காகத் தந்தை இவ்வுலகிற்கு அனுப்பினாரோ, அவற்றை நிறைவாக முடித்த இயேசுவை பார்த்து "இவரே என் அன்பார்ந்த மகன்,; இவரால் என் நெஞ்சம் புரிப்படைகின்றது." என்று அகமகிழ்ந்து கூறினார். அவ்வாறே நம்மையும் தேர்ந்துத் தூய ஆவியை நம் மீது அருளடையாளங்கள் மூலம் அருள் பொழிவு செய்து இயேசுவேபோலப் பணியாற்ற அழைக்கின்றார். நாமுர் முயல்வோமா?

சுயஆய்வு

  1. நான் பெற்றுள்ள தூய ஆவியை உணர்கின்றேனா?
  2. ஆவியின் தூண்டுதலை அடுத்தவரில் தடம் பதிக்கின்றேனா?

இறைவேண்டல்

அனைத்தையும் இயக்கும் தூயஆவியே! எங்களுள் நீர் உறைந்திருப்பதை எங்கள் கண்களும் உள்ளமும் உணர்ந்து உம் ஆற்றலால் யாம் பயணிக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு