அருள்வாக்கு இன்று

ஜூலை 19-வெள்ளி

இன்றைய நற்செய்தி

இன்றைய புனிதர்


புனித ஆர்செனியுஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே மத்தேயு.12:8

வார்த்தை வாழ்வாக:

ஓய்வு நாள் என்றால் இறைவனுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கடமைக்காகத் திருப்பலிக் காணும் கிறிஸ்தவர்களுக்கு அன்று. ஓய்வு நாளாக இருந்தாலும் தீடீரென ஏற்படும் விபத்துக்கள் ஏராளம் அந்த வேளையில் உயிரைக் காக்க ஓய்வு நாள் என்று தடுத்தால் அது தர்மமா? எது நியாயம் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலர் ஓய்வு நாளைக் கண்டபடி பணம் செலவு செய்து ஊர்சுற்றி உல்லாசமாகக் கழிப்பார். சிலர் வீட்டிலிருந்தே மற்றவர்களை உபத்திரத்துக்குளாக்குவார்கள். சிலர் தோற்றத்தில் அசிங்கமாக இருப்பினும் ஆபத்து நேரங்களில் சாககிடக்கும் முகம் அறியாதவனுக்குத் தன் இரத்தத்தைக் கொடுத்து ஓய்வு நாளில் உயிர் காப்பார். எனவே வெளியில் பார்ப்பதற்கு அழக்கற்றவராக இருந்தாலும், அகத்தில் மனத்தூய்மையினால் மற்றவர்கள் உயிர்காக்கும் நண்பனைப் போல நாம் வாழக் கற்றுக் கொள்ளவே இயேசு ஓய்வு நாளை, மானிடமகனுக்குக் கட்டுபட்டது என்கின்றார். எனவே மற்றவர் நலனில் பணிச் செய்யும்போது இயேசுவில் இணைகின்றோம்.

சுயஆய்வு

  1. ஓய்வு நாளை நான் எவ்வாறு கடைபிடிக்கின்றேன்?
  2. பிறருக்கு உதவும் எளிய மனதினைக் கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்

வறியோரைத் தேற்றவே வானகமிருந்து இறங்கி வந்த இயேசுவே! நானும் பிறருக்காக என்னையே முழுமையாக அர்ப்பணிக்கும் நல் மனதினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு