அருள்வாக்கு இன்று

ஜூலை 18-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 11:28-30

இன்றைய புனிதர்


புனித பெடரிக்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். மத்தேயு.11:28-29

வார்த்தை வாழ்வாக:

அன்று யூதசமுதாயம் மோசேவின் சட்டங்களை 39 சட்டங்களாக மாற்றி அடிதட்டு மக்களைத் துன்புறுத்தியது ஒன்று. இயேசு அக்காலத்தில் அதனை வன்மையாகக் கண்டித்து வதைக்கபட்ட மனிதச் சமுதாயத்தைச் சீர்த்தூக்கவே வந்தார். மனத்தாழ்ச்சிள்ளோரை அழைக்கின்றார். இன்றும் அதே அழைப்பைத்தான் நமக்கு விடுக்கின்றார். எங்கெல்லாம் நீதி நசுக்கபடுகிறதோ அநீதித் தலைவிரித்தாடுகின்றதோ அங்கே அகப்பட்டுக் கொண்ட மக்களைச் சீர்துர்க்கி அவர்கள் பாரங்களை, சுமைகளை இறக்கி வைக்க நமக்கு அழைப்பு விடுகின்றார். அன்று தன் ஓரே மகனைப் பறிக்கொடுத்த விதவைப்பெண் தன் வேதனைகளே புலம்பி வரும்போது, இயேசு அவரை எதிர் கொண்டதும், அவர்கள் பாடையைக் கீழே இறக்கிவிடுகின்றனர். அங்கே கைம்பெண்ணின் சுமையை, அங்கலாய்ப்பை மனௌறுதியைக் கண்டு பாடையைத் தொட்டு "மகனே எழுந்து நட" என்ற சுகம் அளித்து விடுதலைத் தந்தார். அப்படியே நமக்கும் மற்றவரின் துயரில் பங்கெடுக்க அழைப்பு விடுகின்றார்.

சுயஆய்வு

  1. நான் மற்றவரின் சுமைகளை இறக்க மனம் கொண்டுள்ளேனா?
  2. சுமை என்றால் என்னவென்று அறிந்துள்ளேனா?

இறைவேண்டல்

மற்றவரின் துயர் துடைத்த இயேசுவே! நானும் இவ்வுலகில் வறுமைக்கோட்டிற்கீழ் வாழும் மக்களின் துயர்களைத் தாங்கும் சுமைதாங்கியாக மாற வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு