அருள்வாக்கு இன்று

ஜூலை 17-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 11: 25-27

இன்றைய புனிதர்


புனித அலெக்சிஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். மத்தேயு.11:25

வார்த்தை வாழ்வாக:

இன்றும் நாம் நம் குடும்பங்களில் பெரியோர்கள், இளைஞர்களுக்குக் கூறும் கருத்துக்களை ஏற்க முன் வருவதில்லை. காரணம் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்ற சிந்தனை. குழந்தைகளை இங்கே நினைவுகூர்கின்றார் இயேசு. காரணம் அவர்கள் புத்திகூர்மை கொண்டவர்களாக இருக்கின்றார். உலக நாட்டங்களில் மூழ்காமல் இருக்கும் வரை அவர்கள் ஞானிகளே! குழந்தைபருவத்தில் வெளிப்படும் வார்த்தைகள் ஞானத்தினால் தான். இயேசுவின் அருளடையளங்களை அனைத்தும் கொண்டு திடத்தோடு அவர்கள் பேசும்போது ஞானம் வெளிப்படுகின்றது. ஆனால் ஞானிகளுக்கோ, அறிஞர்களுக்கோ வெளிப்படையான ஞானம் தோன்றாது. எனவே குழந்தைகளின் வாயிலாக ஞானத்தை வெளிப்படுத்தச் செய்கின்றார். நாமும் உலகபற்றுற்ற நிலையை அடையும்போது ஞானம் நம்மில் குடிக்கொள்ளும். எனவே தான் நீங்கள் குழந்தைகளாக மாறவிடில் விண்ணரசில் நுழைவது கடினம் என்கிறார் இயேசு.

சுயஆய்வு

  1. நான் என் குடும்பத்தில் குழந்தைகளை முதன்மைப் படுத்துகின்றேனா?
  2. நாம் உள்ளத்தில் குழந்தையாக மாறி மற்றவரின் நலனைக் காக்க முற்படுகின்றேனா?

இறைவேண்டல்

"சிறுபிள்ளைகளை என்னிடம் வர விடுங்கள். தடுக்காதீர்" என்று கூறிய இயேசுவே! நான் காணும் சிறுபிள்ளைகளை உமது அருளிலும் ஞானத்திலும் ஊன்றிட அவர்களுக்குப் போதுமான ஞானத்தை வழங்கிட வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு