அருள்வாக்கு இன்று

ஜூலை 16-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 11:20-24

இன்றைய புனிதர்


கார்மேல் மலை புனித மரியாள்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு! பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு! மத்தேயு. 11:21

வார்த்தை வாழ்வாக:

“உங்களைச் சபிப்பவர்களுக்கு ஆசி கூறுங்கள்” என்று மொழிந்த இயேசு, இங்கே ஒவ்வொரு நகரங்களையும் சபிக்கின்றார் ஏன்? இங்கே அநீதி தலைதூக்கி நிற்கின்றது. இதன் நிமித்தம் அபலை மக்கள் அவதியுறுகின்றனர். எனவே தான நீதித் தடுமாறும்போது சபிக்கின்றார். இறைவனின் வார்த்தைக்குச் செவிகொடுக்காத இந்த நகரங்களைச் சபிக்கின்றார். பல அருட்குறிகளைக் கண்டும்;, காணதவர்களாய் இருந்தவர்களைக் கண்டு சபிக்கின்றார். தாயின் கருவிலே பெயர் சொல்லி அழைக்கப்பட்ட நாம் திருமுழுக்கின் வழியாக அவரது மறையுடலாக இருக்கின்றோம். இயேசு தலை, நாம் அவரது உடல். உடலில் எந்த ஒரு சிறு பகுதியாவது காயப்பட்டாலோ அஃது அனைத்தூடலுக்கும் வலி தருகின்றது. அதுபோல் நாம் அனைவருமே ஒரே சமச்சீரான இயேசுவின் குருதியில் ஒன்றிருக்கின்றோம். யாருக்குக் குறை ஏற்பாட்டாலும், பொதுநலம் கருதிச் செயல்பட்டால் நாமும் நற்செய்தியினை மக்களுக்கு ஊட்டும் இறைமக்களாகத் திகழ்வோம். இல்லையேல் அதைச் சாபம் நம்மையும் சுடும்.

சுயஆய்வு

  1. இறைவார்த்தையின் அடிப்படையில் சமூக மாற்றத்திற்கு உழைக்கின்றேனா?
  2. சுயநலம் கொண்டு வாழ்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா! உம் வார்த்தைகளின்படி வாழ்ந்துப் பொதுநலம் பேணவும், இறைவனில் அனைவரும் ஒரே இனம் என்ற நிலையில் வாழும் பேற்றினை வழங்குமாறு உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு