அருள்வாக்கு இன்று

ஜூலை 15-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:34- 11:1

இன்றைய புனிதர்


புனித பொனவெந்தூர்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். மத்தேயு 10:38

வார்த்தை வாழ்வாக:

இயேசு இறையரசை மண்ணில் பரப்பவே இவ்வுலகிற்கு வந்தார். அவரது நோக்கம் எல்லாரும் எல்லாம் பெற வேண்டும். கடவுளின் சிறந்த படைப்பான மனிதன் ஒரே சீரான சூழலில் வாழ வேண்டும். ஏற்றதாழ்வு அடிமைத்தனம், வேற்றுமை, அநீதி போன்ற அகோரப் பிடியிலிருந்து விடுபட்டு அனைவரும் இறைவனில் சமம் என்ற நிலையை மண்ணக மாந்தர் அடைந்திட வேண்டும். இதுவே அவரது விருப்பமும் அவரை அனுப்பிய தந்தையின் விருப்பமும் ஆகும். ஆனால் அவருக்குக் கிடைத்தது சிலுவை மரணம். எனினும் அவர் அன்பு கட்டளையிட்டுச் சென்றார். 'நான் எதையெல்லாம் செய்தேனோ அவற்றையெல்லாம் நீங்களும் செய்யுங்கள். அதை மறந்து சுயநலத்திற்காக வாழ்வோர் என்னுடையோர் அல்ல” எனச் சாடுகின்றார். சமூக பிடியிலிருந்து மக்களைக் காத்து பெருமை சேர்த்த மேத்தா பட்கர் போன்றோர்கள் இயேசுவின் கட்டளைக்குத் தகுதி பெறுகின்றனர். காரணம் அடிதட்டுமக்களின் முன்னேற்றத்திற்காக அரும் பாடுபட்டவர்கள். இவர்களைச் சற்று சிந்திப்போம்.

சுயஆய்வு

  1. இயேசுவின் விருப்பத்தை எந்த நிலையிலும் நிறைவேறுகின்றேனா?
  2. சுயநலம் கருதாமல் பிறர்நலம் பேண என்னுடைய பங்கு என்ன?

இறைவேண்டல்

மண்ணகம் இறங்கி மானிடரை மீட்ட இயேசுவே! நானும் 'நான்” என்ற அகந்தையை விட்டுச் சமூக மாற்றத்திற்காக அடிதட்டு மக்களை நினைவில் கொண்டு அவர்கள் சுமைகளைச் சுமந்து செல்லும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு