அருள்வாக்கு இன்று

ஜூலை14 -ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:7-13

இன்றைய புனிதர்


புனித கேமிலஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மாற்கு 6:9

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களை நற்செய்திப் பணிக்கு இருவர் இருவராகப் பிரித்து அனுப்புகின்றார். காலில் மிதியடி போட்டுக் கொள்ளுங்கள். அங்கி ஒன்றே போதும். உணவு, பை, செப்புகாசு எதையுமே எடுத்துச் செல்ல வேண்டாம். உமக்குத் தேவையானதைத் தகுந்த நேரத்தில் உன் தந்தை உங்களுக்குக் கொடுப்பார். செல்கின்ற வீட்டிலேயே தங்கிருந்து அமைதியை அறிவியுங்கள். உங்கள் அமைதி அவர்களுக்குத் தேவையாக இருந்தால் அஃது அங்கேயே தங்கிவிடும் இல்லையேல் மீண்டும் உங்களிடம் திரும்பிவிடும். அப்படி நீங்கள் திரும்பிவரும்போது உங்கள் காலில் ஓடியுள்ள தூசியையும் தட்டிவிடுங்கள். ஏனெனில் அவர்கள் வீட்டு அமைதியற்றத் தூசி. அஃது அங்கேயே தங்கட்டும். கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்கட்டும் என்ற வரிகளின் உச்சக்கட்டம்.

சுயஆய்வு

  1. மானிடமகன் சீடர்களை எத்தகைய எச்சரிக்கையோடு அனுப்புகிறார் -அறிகிறேனா?
  2. நற்செய்தியின் பொருட்டு எனது பணி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது அறிவுறைகளின்படி நான் கடந்து சென்று நற்செய்தியைப் பறைச்சாற்ற வரம் தாரும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு