அருள்வாக்கு இன்று

ஜூலை 13-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:24-33

இன்றைய புனிதர்


புனித ஹென்றி II

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். மத் 10:27

வார்த்தை வாழ்வாக:

நாம் புதிதாய் தொடங்கும் எந்த ஆக்கமான செயலுக்கும் தடைகள் இருக்கதான் செய்யும். இனம்புரியாத பயம் இருக்கும் . இது இயற்கை. ஆனால் இயேசு இந்த உலகை மீட்க ஒரு புதிய அற்புதக் கருத்தை உருவாக்கினார். புரையோடிப் போன சாதிவெறி, சுரண்டல், கயமைதனம், பிரிவினைகள், சூழ்ச்சிகள் போன்ற மனித இனத்தை அழிக்கும் சக்திகளுக்கு மாற்று சக்தியாகப் பரிவு, இரக்கம், அன்பு, தியாகம் ஆகிய மதிப்பீடுகளை மக்களிடையே உணரச்செய்து அவருடைய உணர்வுகளுக்கு அடிதளமிட்டார். அவருடைய வார்த்தைகளைச் சுமந்து செல்லும் தூதர்களுக்கு எதிர் கொள்ளபோகும் சோதனைகளை எப்படி எதிர்த்த வெற்றிக்கான வழிமுறைகளை எடுத்துக் கூறுகின்றார். எல்லாசெயல்களுக்கும் தம் தந்தையைத் துணை இருப்பார் என்ற இலக்கை நமக்குள் பதிக்கின்றார். நாமும் புயலெனப் புறப்படுவோமா?

சுயஆய்வு

  1. நற்செய்தியின் மதிப்பீடுகளைப் பிறருக்கு அளிக்க எனக்குத் தகுதி உள்ளதா?
  2. இறைவார்த்தைகளை அறிந்து அதை அடுத்தவருக்கு அறிக்கத் தயங்குகிறேனா?

இறைவேண்டல்

மானிடருக்காக மண்ணகம் இறங்கிய இயேசுவே! உன் பணியை இத்தரணியில் தடம் பதிக்க எனக்குப் போதுமான தூய ஆவியின் அருள் பொழிவினைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு