அருள்வாக்கு இன்று

ஜூலை 12 - வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:16-23

இன்றைய புனிதர்


புனித யோவான் கால்பர்ட்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். மத்தேயு 10:16

வார்த்தை வாழ்வாக:

ஆண்டவருடைய பிள்ளைகளாகிய நாம் எப்படி வாழவேண்டும் என்று இயேசு கூறுகின்றார். பாம்பு தன் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள முன்மதிப் படைத்ததாக உள்ளது. அதேபோல் நாமும் நம்மைச் சுற்றியுள்ள நாகரீகக் கவர்ச்சிக்குள் நம்மை நுழையவிடாமல் தற்காத்துக் கொள்ளவே இயேசு நமக்கு அறிவுரை வழங்குகின்றார். திருச்சபை எனும் கவசம் இருப்பினும் அதிலிருந்து சிலர் வெளியேறித் தப்பான போதனைகளில் சிதறுண்டுப் போகின்றனர். எனவே தான் இந்த எச்சரிக்கைப் பாம்பு வளையை விட்டு வெளியே வந்தால் எப்படி ஆபத்தோ, அதுபோல் தான் நமக்கு என்று கூறுகிறார். புறாவைப்போலக் கள்ளம் கபடமில்லாதவராக இருக்கச் சொல்கின்றார். புறாவின் வடிவம் தூய ஆவியானவராகக் குறிக்கப்படுகின்றது. எனவே நாம் இயேசுவை நம்மில் கொண்டிருந்தால் துன்பம் வரும் போது நம்மைக் காத்திடுவார்.

சுயஆய்வு

  1. மற்றவருக்கு உதவும் போது துன்பம் வருமானால் அதைகண்டுத் துவண்டுப் போகின்றேனா?
  2. முன்மதியும், கபடமற்ற உள்ளமும் கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்

என் அன்பரே இயேசுவே! என் பணிச் செய்யும் போது என்ன இடறல் ஏற்பட்டாலும் துவண்டு போகாமல் பணிசெய்யும் ஆற்றலைத் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு