அருள்வாக்கு இன்று

ஜூலை11 - வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:7-15

இன்றைய புனிதர்


புனித பெனடிக்ட்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. மத்தேயு 10:10

வார்த்தை வாழ்வாக:

ஒருவர் மிகுதியான சொத்துக்களை வைத்திருப்பதால் நிறைவாழ்வு வந்துவிடாது என்கிறார் இயேசு. இவ்வுலக செல்வங்களுக்காக உழைக்க வேண்டாம். இதற்கு அப்பாலும் நிறைவாழ்வு ஒன்று உள்ளது. அதை பெறுவதற்குத் தான், இவ்வுலக வாழ்க்கை. அதனை அடையப் பலசோதனைகள் எதிர்ப்புகள் வரலாம். அதனை எப்படி எதிர் கொள்வது? விவிலியம் - மற்றும் செபம், தபம், தர்மம் இவற்றை முறையாக மேற்கொள்ளும்போது நாம் தகுதியுடமை பெறுவோம். இவ்வுலக வாழ்விற்கு எதையும் சேமிக்க வேண்டாம். பயணத்திற்கு எதுவும் எடுத்துச் செல்லவேண்டாம். நம் தேவன் தகுந்த நேரத்தில் நமக்கு வழங்குவார் என்று இயேசு நமக்கு அறிவுறுத்துகின்றார்.

சுயஆய்வு

  1. என்னிடமுள்ள பொருட்களைப் பிறர் தேவைக்குக் கொடுக்கின்றேனா?
  2. இவ்வுலக பொன்னோ, பொருளோ உடன் வருவதில்லை என்பதை உணர்கின்றேனா?

இறைவேண்டல்

இன்னுயிரே என் இறைவா! நான் இவ்வுலக பயணம் நிரந்தரம் அல்ல என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கு உதவிடும் மனதினை தர வேண்டி மன்றாடுகின்றேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு