அருள்வாக்கு இன்று

ஜூலை 10-புதன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 10:1-7

இன்றைய புனிதர்


புனித பெலிசிட்டியும் ஏழு சகோதரர்களும்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: "பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்" மத்தேயு 10: 5-6

வார்த்தை வாழ்வாக:

பிறஇனத்தாரின் எந்தப் பகுதிக்கும் செல்லவேண்டாமென்று இயேசு அன்புக் கட்டளையிடுகிறார். முறைதவறி ஆதிக்கவெறியால் துடிக்கும் மறைநூல் அறிஞர்கள், சதுசேயர், பரிசேயர் போன்றாரில் அனேகர் பாதைத் தவறிச் சென்றுள்ளனர். அவர்களை மனந்திருப்பி மீண்டும் மந்தையில் சேருங்கள் என்கின்றார். அதேபணியைத்தான் நமக்கும் கொடுக்கின்றார். இக்காலச் சூழலில் அரசியலிலும் சரி அரசாங்கபணிகளிலும் சரி ஆதிக்கவர்க்கம் நுழைந்துச் சுரண்டல் என்ற போர்வையில் பல தீயச்செயல்களைச் செய்து வருகின்றனர். அத்தகையோரிடையே நீங்களும் சென்று இயேசுவின் மதிப்பீடுளை ஊன்றுங்கள். வறியோரைக் கரைச் சேருங்கள் என்று நம் ஒவ்வொரையும் அழைக்கின்றார். இப்பணிச் செய்ய முதலில் நாம் இறையனுபவத்தில் ஊன்றுவோம். அதற்கான தகுதியை வளர்ப்போம். பிறகு அன்னை தெரெசாவைப் போல் தெருவோரம் கிடக்கும் சிறார்களைக் கரைச் சேர்ப்போம்.

சுயஆய்வு

  1. இயேசுவின் பணிகளைச் சமுதாயத்தில் ஆற்ற நான் என்ன தகுதிகளை வளர்த்தேன்?
  2. என்னையே முழுமையாக மற்றவர்களுக்காக அர்ப்பணிக்கத் தயாராக உள்ளேனா?

இறைவேண்டல்

என் அன்பு இயேசுவே! நின் பணியாற்ற எனக்குப் போதுமாத் தகுதியை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை எனக்குப் பொழிந்தருள வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு