அருள்வாக்கு இன்று

ஜூலை9-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 9:32-38

இன்றைய புனிதர்


புனித அகஸ்டின் ஜாவோ ரோங்கு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

"அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்" என்றார். மத்தேயு 9:37-38

வார்த்தை வாழ்வாக:

அன்று இயேசு, பல ஊர்களுக்குச் சென்று பார்த்த இடங்களில் பலர் பேயின் பிடியிலும் அடிமைதனத்திலும், நோயின் பிடியிலும் அகப்பட்டு அவதியுற்றதைக் கண்டார். மனம் தளர்ந்து போனார். "அறுவடை மிகுதி: வேலையாள்களோ குறைவு." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இன்றும் இப்படிபட்ட அறுவடை நிலைமிகுந்து கிடக்கின்றது. தன் ஆயனையே அறியாத பலர் உள்ளனர். இருப்பதை விட்டு விட்டு இல்லாத அடம் தேடி அலையும் மக்கள் அநேகர். பிறசபைகளுக்கச் சென்றும் அங்கும் சுரணடல் நிலைகண்டு அதழருப்தி அடைகின்றனர். அப்படிப்பட்ட மக்களை இனம் கண்டு உண்மையான இறைவனை முழுமையான நம்பிக்கையோடு கேட்டும் போது அனைத்தும் கிடைக்கும் என்ற மனநிறைவோடு நாம் வாழகற்றுக்கொள்ள வேண்டும்.

சுயஆய்வு

  1. சமுதாயத்தில் இறையாட்சியின் பணிகள் நிறைந்திருப்பதை உணர்ந்துள்ளேனா?
  2. உணர்ந்தவற்றை மற்றவரோடு பகிர்ந்து, மற்றவரது இன்பதுன்பங்களில் பங்கேற்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு ஆண்டவரே! நீர் விட்டுச் சென்ற அறுவடைபணியினை இச்சமுதாயத்தில் செய்து, எங்கெல்லாம் களைகள் மிகுந்துள்ளாதோ அவற்றைக் களைந்து நல்ல கதிர்களை வளர்க்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு