அருள்வாக்கு இன்று

ஜூலை 8-திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு. 9: 18-26

இன்றைய புனிதர்


புனித கிரிம்பால்டு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு: உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். மத்தேயு. 9: 22

வார்த்தை வாழ்வாக:

மேற்கண்ட நிகழ்ச்சியின் மூலம் இளைஞன் இறந்துவிடுவான் என்று மருத்துவர்களும் கைவிட்ட நிலையில் அந்தத் தாய் மடடும் ஆழ்ந்த விசுவாசம் கொண்டு இறைவனிடம் கண்ணீர் மல்கச் செபிக்கின்றார். உறுதியோடு செபிக்கின்றார். மருத்துவரின் வாயிலாகக் குணமளிக்கின்றார். "மகளே துணிவோடிரு.உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று" என்ற இறைமகனின் வார்த்தைகளுக்கேற்ப அந்த மகள் குணமானார். அவ்வாறே நம்மைப் பார்த்து உறுதியோடு செபியுங்கள் எல்லாம் உங்களுக்குக் கிடைக்கும். எந்தத் துன்பம் துயரம், சோதனை வரும்போதும் மனம் தளராமல் ஒரே மனதினராய் நம்பிக்கையோடு செபியுங்கள. உங்கள் செபம் கேட்கப்படும். என்று நமக்கு வலியுறுத்துகின்றார். நாமும் இறைவனைப் பற்றிக் கொள்வோம்.

சுயஆய்வு

  1. நான் இறைவனிடம் முழுநம்பிக்கையோடு எதையும் கேட்கின்றேனா?
  2. அல்லது அவநம்பிக்கையோடு கேட்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா இன்றும் என்றும் மாறாமல் உம்மில் ஐக்கியமாகி இறையனுபவத்தில் ஊன்றி வாழ்ந்திட வரம் அருளும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு