அருள்வாக்கு இன்று

ஜூலை7-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:1-6

இன்றைய புனிதர்


புனித ஃபேன்ட்டனஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார். மாற்கு 6:6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு, ஓய்வுநாளில் கற்பித்தார். அவரது போதனைகளை மக்கள் வியப்புற்றனர். இவருக்கு இந்த ஞானம் எங்கிருந்த வந்தது என்றனர். ஆனால் பலர் அவரை மெசியா என்று ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். அப்போது இயேசு சொந்த ஊரிலும், சுற்றத்திலும், வீட்டிலும் இறைவாக்கினர்கள் மதிக்கப்படுவதில்லை என்றார். அதே வேளையில் அங்கிருந்த மக்களின் நம்பிக்கையின்மையைக் கண்டு இறைமகன் வியப்புற்றார். அதே நிலை இன்றும் அனேகர் இறைவாக்கு ஏற்கப் படுவதில்லை என்பதை நாமும் அறிவோம். இறைமகனைப் போன்று எல்லா நேரத்திலும் என்ன நேர்ந்தாலும் இறையரசு பணியாற்றிடத் தயாராகிடுவோம். நம்பிக்கை நம்மில் ஊற்றெடுக்கட்டும். இறையரசு இம்மண்ணகம் காணும் எனும் சிந்தனை நம்மில் நங்கூரமாகட்டும்.

சுயஆய்வு

  1. இறைவாக்கினரின் ஏற்புடமை எத்தகையது?
  2. நம்பிக்கை எனும் அச்சாரம் எப்படி உணர்கிறேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எந்நேரத்திலும் பணியாற்றும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு