அருள்வாக்கு இன்று

ஜூலை5-வெள்ளி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 9:9-13

இன்றைய புனிதர்


சக்கிரியா புனித அந்தோணி

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

" பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்: ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் " என்றார். மத்தேயு 9:13

வார்த்தை வாழ்வாக:

மத்தேயு என்றால் இறைவனின் கொடை என்று பொருள். அவர் செய்த தொழில் உதறிதள்ளி விட்டு இயேசுவை பின் தொடர்கின்றார். தன் நண்பர்களையும் இயேசுவுடன் விருந்து உண்டு மகிழ அழைக்கிறார். நன்கு கற்றறிந்த பரிசேயருக்கோ, புரியாத புதிராக இருந்தது. பாவிகளோடும் வரிதண்டுபவரோடு விருந்துண்டு மகிழ்கின்றாரே என்ற ஏளனபார்வை இயேசுவின்பால் விழுந்தது. ஆனால் இந்த செயல் மூலம் இயேசு நீங்கள் தரும் பலி எனக்கு சிறந்தது அல்ல. சமுதாயத்தில் யார் புறந்தள்ளபட்டுள்ளனரோ அவர்களே என் நண்பர்கள். அப்படிபட்ட இரக்கம் கொண்டவரைத்தான் நான் விரும்புகின்றேன். இதையே நீங்களும் என் நினைவாகச் செய்யுங்கள் என்று, ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தையே காணவே நான் விரும்புகின்றேன் என்றார். இதையே நீங்களும் கற்றக்கொள்ளுங்கள் என்று நமக்கு உணர்த்துகின்றார்.

சுயஆய்வு

  1. ஏழை எளியோரின் மீது இரக்கம் காட்டுகின்றேனா?
  2. எனது அழைப்பிற்கேற்ப பணி செய்கின்றேனா?

இறைவேண்டல்

இரக்கமே உருவான எம் இயேசுவே! உம்மைப் போல நானும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டோரை இனம் கண்டு அவர்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லும் வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு