அருள்வாக்கு இன்று

ஜூலை4-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 9:1-8

இன்றைய புனிதர்


போரச்சுக்கல் புனித எலிசபெத்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

”மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். பின்பு அவர் முடக்கு வாதமற்றவரை நோக்கி, ”நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ ” என்றார். மத்தேயு 9:6

வார்த்தை வாழ்வாக:

ஒருவரின் பாவங்களே மனிதனுக்கு நோய்களைக் கொண்டுவருகிறது. அவன் பாவ வாழ்க்கையில் உழலும்போது சாத்தானும் அவனோடு சேர்ந்து நோய்களை மனிதனுக்குக் கொடுத்த மகிழ்கின்றன. மனிதன் கடவுள் கொடுத்த சட்டங்களை நமதாக்கிக் கொள்ளாதபோது நோய்கள் வந்து சேர்கின்றன. ஆனால் நோயுற்றோர்களுக்கு நாம் காட்டும்போது இயேசுவின் இரக்கம் இங்கே காணப்படுகின்றது. மனிதாபிமானத்தோடு நோயுற்றவரின் கட்டிலைத் தூக்கி வந்தவர்களின் இரக்கச் செயல் இயேசுவின் நெஞ்சைத் தொட்டது. எனவே முடக்கு வாதக்காரனின் பாவங்களை மன்னித்தார். பாவமன்னிப்பு நோயைக் குணப்படுத்திவிட்டது. நாமும் இறைமகனின் பாதையைத் தொடர்வோமா?

சுயஆய்வு

  1. நானும் பிறர் பாவங்களை மன்னிக்கின்றேனா?
  2. நோயுற்றோர்களுக்கு நான் காட்டும் பரிவிரக்கம் என்ன?

இறைவேண்டல்

மனதுருகும் என் இயேசுவே! நோயாளிகள் சுகம் பெற நானும் ஒரு கருவியாக வேண்டும். மனிதநேயம் என்னில் மலர வேண்டிய வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு