அருள்வாக்கு இன்று

ஜூலை3-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 20:24-29

இன்றைய புனிதர்


புனித தோமையார்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரிடம், ”நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்றார். யோவான் 20:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தேமாவைச் சந்திக்கின்றார். ஏனென்றால் தேமாவின் ஐயப்பாடுகள் நியாயமானவையே. எப்படி எனில் மனிதனாகப் பிறந்து மானிடருக்காகச் சிலுவை சாவை ஏற்று மரித்து மீண்டும் உயிர்த்தார் என்பது அன்று உள்ளவர்கள் அறிவார்கள். ஆனால் தேமா தான் கேள்வியின் மூலம் முக்காலத்திற்கும் விடை தேடுகின்றார். இதனை உணர்த்தியவரும் தந்தையே ஆவார். எனவே தான் இறைமகன் தேமாவை நோக்கி நீ கண்டதினால் நம்பினாய். ஆனால் இன்றைய சூழலை மனதில் கொண்டு காணாமல் நம்புவோர் தான் பேறு பெற்றவர்கள் என்று முத்திரை பதிக்கின்றார் இயேசு. ஆம் சகோதரர்களே! இன்று நாம் கண்ணுக்குப் புலப்படாத இறைவனைக் கண்டோம், கேட்டோம், அவரில் மகிழ்ந்தோம் என்பவை நம்முடைய உள்ளங்களில் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.

சுயஆய்வு

  1. இயேசுவின் மண்ணக வரவு என்னுள் எழும்பும் உணர்வு யாது?
  2. அதை நான் உணர்ந்து செயல்படுவது எவ்வாறு?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம் முத்திரை எம்முள் பதிந்து உமது சாட்சியாக வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு