அருள்வாக்கு இன்று

ஜூலை2-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 8:23-37

இன்றைய புனிதர்


புனித புரோசெஸ்சஸ்/ மார்ட்டினியன்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவர்களை நோக்கி," நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மத்தேயு 8:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு காற்றையும் கடலையும் அடக்குகின்றார். காரணம் இறைமகன் உடன் பயணிக்கும் சீடர்கள் கப்பல் புயலால் கொந்தளிக்கவே இறைமகனின் உடனிருப்பைச் சுவைக்க மறுத்தநிலையில் தான் நாம் இறந்து விடுவோமோ என்று அஞ்சுகிறார்கள். இறைமகனோ அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் இவர்கள் அஞ்சி நடுங்கி அவரை உசுப்பி எழுப்பம்போது தான் கோபத்தோடு "நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?" என்ற அவர்களை நோக்கிக் கூக்குரலிட்டு விட்டுக் காற்றையும் கடலையும் கடிந்து கொள்கின்றார். அங்கே அமைதி நிலவியது. இதனைக் கண்ட இவர்கள் காற்றும் கடலும் அவர்க்குக் கீழ்படிகின்றனவே. இவர் எத்தகையவராக இருப்பார் என்று உயர்ந்தச் சிந்தனையில் இருந்தனர்.

சுயஆய்வு

  1. இறைமகனின் வாக்கு என்னில் உணர்த்தும் செய்தி யாது?
  2. நம்பிக்கை எத்தகையது என்பதை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பின்மடல் முகப்பு