அருள்வாக்கு இன்று

ஜூலை 1- திங்கள்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 8:18-22

இன்றைய புனிதர்


புனித ஜீனிபெரோ செர்ரா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அவரைப் பார்த்து, "நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்" என்றார். மத்தேயு. 8:22

வார்த்தை வாழ்வாக:

இயேசு "இவ்வுலகில் நான் என்னவெல்லாம் செய்தேனோ அவற்றையெல்லாம் நீங்களும் செய்யுங்கள்" என்று நமக்கு அழைப்பு விடுக்கின்றார். "வீட்டில் என்ன நடந்தாலும் அதை நான் பார்த்துக் கொள்கின்றேன். என்னிடம் சரணடைந்துவிட்டால், நீர் நினைக்கும் நல்லவையெல்லாம் நன்றாக நடக்கும். இவ்வுலகப் பணிக்காக வருந்தாதே. அவற்றை நான் பார்த்துக்கொள்கின்றேன். உன் திறந்த உள்ளத்தை எனக்குத் தா! அதுவே நான் விரும்பும் ஆலயம். உம்மில் நான் பிரவேசிக்கும்போது என் திட்டங்கள் உன் வழியாக நிறைவேறும். எனவே நான் உனக்கு அழைப்பு விடுக்கின்றேன். அன்று பேதுருவை, பவுலை, பிறசீடர்களை அழைத்தது போல இன்று உங்களையும் அழைக்கின்றேன். வந்து என் பணியில் நீங்களும் பங்கு பெறுங்கள்".

சுயஆய்வு

  1. நான் தாயின் கருவிலே பெயர் சொல்லி அழைக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை உணர்கின்றேனா?
  2. இயேசுவின் அழைப்பில் என்னை இணைக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இறைவா அநேகரைத் தம் பணிக்கு அழைத்தீர். அவர்களைப் போல என்னையும் மாற்றுச் சமுதாயத்தைக் காண அழைக்கின்றீர். இதை நான் எந்தச் சோதனையிலும் மனம் தளராது ஏற்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு