ஜூன், 23 -திங்கள்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 12:38-42

"மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.”

அருள்மொழி:

மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார்.
மத்தேயு. 12:40

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசுவிடம் தீய விபச்சார தலைமுறையினரை அடையாளம் கேட்கின்றனர். இறைமகன், “யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் உங்களுக்கு வழங்கப்பட மாட்டாது. யோனா மூன்று இரவும், மூன்று பகலும் பெரிய மீனின் வயிற்றிலிருந்தார். ஆனால் உங்கள் முன் நிற்பவரோ மூன்று பகல்கள், மூன்று இரவுகள் நிலத்தின் உள்ளே இருப்பார்” என்று உண்மை நிகழ்வைப் பதிவு செய்கின்றார். தீர்ப்பு நாளில் நினிவே நகர் மக்கள் போல இறைமகனின் வார்த்தைக்கேற்ப இன்று வரை வாழ்வோரும் கண்டனம் செய்வார்கள். காரணம் யோனாவின் செய்தியைக் கேட்டு மனம் மாறியவர்கள், நமக்கு முன்பாகப் புனிதர்களாக, வேத சாட்சிகளாக இருந்தோரும் தென்னாட்டு இளவரசியோடு கண்டனம் செய்வார்கள். ஏனெனில் சாலமோனின் ஞானத்தை சுவைத்தவர்கள் நமக்கு முன்பாக மனம் மாறிய புனிதர்களும் ஞானத்தை சுவைப்பார்கள். நாமும் இறைஞானத்தைப் பெற்று இறையரசில் இணைவோம்

சுயஆய்வு :

  1. யோனாவின் அடையாளம் கூறுவது உணர்கிறேனா?
  2. மானிட மகனின் அடையாளம் கூறுவது அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வார்த்தைகள் என் வாழ்வின் நங்கூரமாகிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org