ஜூலை , 18 - புதன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 11:25-27

"ஆம் தந்தையே, இதுவே உம் திருவுளம்.”

அருள்மொழி:

ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
மத்தேயு 11:26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தந்தை - மகன் உறவு நிலையை இங்கே பதிவு செய்கின்றார். தந்தையின் திட்டத்தை நிறைவு செய்யவே மனுமகன் மனித உருவம் எடுத்தார். ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, இவற்றை குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினார். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே மகனின் வேலை. உமது திருவுளப்படியே நான் இயங்குகின்றேன். நீர் என்னுள்ளும் என் வார்த்தைகள் உம்முள்ளும் இணைந்திருப்பது போல, இவ்வாக்குப்படி வாழ்வோர் அனைவரும் என் வழியாக உம்மில் இணைகின்றனர் என்பதற்கு இதைவிட மேலான சான்று உண்டோ என்று இறைமகன் நம் அனைவருக்காக தம் உயிரையே பலியாகக் கொடுத்தார். தந்தையாகிய இறைவன் அவரை உயிர்ப்பித்து விண்ணக வாழ்வின் மேன்மையை உணரச் செய்தார்.

சுயஆய்வு :

  1. தந்தை - மகன் உறவுநிலை அறிகிறேனா?
  2. தந்தையின் திருவுளம் என்னவென்று அறிகிறேனா?

இறை வேண்டல்:

தந்தையின் திருவுளம் என்னவென்று அறிகிறேனா?


www.anbinmadal.org