ஜூலை , 16 - திங்கள்
புனித கார்மேல் அன்னை பெருவிழா
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 10:34 - 11:1

“சிறியோருள் ஒருவருக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் கொடுப்பவர் எவரும் கைம்மாறு பெறுவர்.”

அருள்மொழி :

இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 10:42

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, “இறையரசின் பொருட்டு ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் தங்களை நாடி வருவோருக்கு அன்புக் கரம் நீட்டி ஏற்றுக்கொள்வோர் என்னையே ஏற்றுக் கொள்கிறார். எம் சீடர் சின்னஞ்சிறியவராக இருப்பினும் அவர்களுக்கு ஒரு கிண்ணம் குளிர்ந்த நீர் தருபவரும் மிகுந்த கைம்மாறு பெறுவார்” என்று இறைமகன் பறைசாற்றுகின்றார். இன்று நாம் புனித கார்மேல் அன்னை பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். அன்னை இறைவனின் திட்டத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து, அவர் சிறு வயதில் ஏற்பட்ட துன்ப துயரங்களைத் தாழ்மையோடு தன் மகனின் பணி வாழ்வில் தன்னையே அர்ப்பணித்து, சிலுவை வரை வியாகுல அன்னையாக நின்ற மரியாவின் மாண்பு விண்ணவரும், மண்ணவரும் மரியாவுக்கு வணக்கம் செலுத்தி அவரது ஆசீரை நாளும் பெறும் நிலையை நாம் காண்கின்றோம்.

சுயஆய்வு:

  1. இறைப்பணியாளரை ஏற்கிறேனா?
  2. பிளவுபட்ட மனுக்குலத்தை ஒன்றிணைக்க என் முயற்சி யாது?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது அன்னையைப் போன்று தாழ்ந்து பணியாற்றும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org