ஜூலை , 13 - வெள்ளி
இன்றைய அருள்வாக்கு

மத்தேயு. 10:16-23

“என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.”

அருள்மொழி :

என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.
மத்தேயு 10:22

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு நற்செயிதியின் பொருட்டு மக்கள் படும் துன்பத்தை இங்கே விவரிக்கின்றார். காரணம் இறைமகனே இதற்காக தானே பூவுலகிற்கு வந்தார். பிளவுப்பட்ட மனுகுலத்தை மீட்கும் பணியே அவரது. ஆனால் அவரை ஏற்க மனமில்லாதவர்கள் அவரை சிலுவை சாவுக்கு கையளித்தனரே. எனவே தான் சீடர்களுக்கு அறிவுரை கூறுகின்றார். என் பொருட்டு எல்லாரும் வெறுப்பர். மனவுறுதியுடன் இருந்து நற்செய்தியை அறிவியுங்கள். யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் என் பொருட்டு சான்று பகர்வீர்கள். அவ்வேளையில் நீங்கள் என்ன பேச வேண்டுமோ அதை என் தந்தையின் ஆவியார் உம் வாயிலாக பேசுவார். ஆனால் அங்கே என்பொருட்டு அனைவரும் வெறுப்பர் மனவுறுதியுடன் இருந்து சான்று பகருங்கள் மீட்கப்படுவீர் என்று நமக்கும் வலியுறுத்துகின்றார்.

சுயஆய்வு :

  1. என் பொருட்டு உங்களை வெறுப்பர் என்பதின் பொருள் அறிகிறேனா?
  2. மனவுறுதியுடன் சான்று பகர்கிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, நற்செய்தியின் பொருட்டு என்ன நேர்ந்தாலும் மனவுறுதியுடன் நின்று போதிக்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org