ஜூலை , 10 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு. 9:32-38

"அறுவடையோ மிகுதி. வேலையாட்களோ குறைவு."

அருள்மொழி :

அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு.
மத்தேயு 9:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, நகர்கள், ஊர்கள் தோறும் சுற்றி வந்தார். தொழுகைக் கூடங்களில் கற்பித்தார். நோய் நொடிகளைக் குணமாக்கினார். அங்குள்ள மக்கள் ஆயனில்லா ஆடுகளைப் போல் இருந்ததைக் கண்டு அவர்கள் மீது பரிவு கொண்டார். இந்த வேதனையின் பொருட்டு தம் மக்களைக் காத்திட “அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு” என்று உரக்கக் கூறி, தம் அறுவடைக்குரிய வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளர் தந்தையிடம் மன்றாடும்படி நமக்கு நல் ஆசானாகப் பதிவு செய்கின்றார். எனவேதான் குருக்களை ஏற்படுத்தினார். பொதுநிலையினர், துறவற சபையினர் அனைவரும் இறைமகன் விட்டுச் சென்ற இறையரசுப் பணி தொடர அயராமல் உழைக்கின்றனர். அவர்கள் இறைப்பணி தொடர்ந்திட இறைவனிடம் செபிப்போம்.

சுயஆய்வு :

  1. அறுவடை என்றால் என்ன?
  2. வேலையாட்கள் யார்? அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது அறுவடைக்குரிய பணியாளர்களைத் தேர்வு செய்யும் ஆற்றலை வழங்கிடும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org