ஜூலை , 5 - வியாழன்
இன்றைய நற்செய்தி:

மத்தேயு 9:1-8

"நீ எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குப் போ."

அருள்மொழி:

மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்" என்றார். பின்பு அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, "நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.
மத்தேயு 9:6

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, முடக்குவாதமுற்ற ஒருவரை மக்கள் கட்டிலில் தூக்கி வந்தனர். அவர், அவர்களது நம்பிக்கையைக் கண்டு, முடக்குவாதமுற்றவரை நோக்கி, “மகனே, துணிவோடிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அதே வேளையில் பாவங்கள்தான் அவனது கை கால்களை முடக்கு வாதத்திற்குக் கொண்டு சென்று உள்ளது என்பதை இந்த மகா மன்னிப்பின் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடிகின்றது. எனவே நாம் பாவங்கள் செய்யாமல், இயேசுவின் மதிப்பீடுகளின்படி வாழ்வோம். எனவே இறைமகன் “நீ எழுந்து கட்டிலைத் தூக்கிக் கொண்டு நட” என்றார். பாவத்தை அவர்களது நம்பிக்கையைக் கண்டே மன்னிப்பு வழங்கினார் என்பதன் வெளிப்பாடே இந்தக் குணமளித்தல் நிகழ்வு என்பதை மனதில் பதிவு செய்வோம்.

சுயஆய்வு:

  1. பாவங்கள் உணர்த்தும் நிகழ்வை அறிகிறேனா?
  2. நம்பிக்கையின் மேன்மையை உணர்கிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, இறை நம்பிக்கையில் ஊன்றி வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org