ஜூலை , 4 - புதன்
இன்றைய நற்செய்தி

மத்தேயு. 8:28-34

"வாழ்வு தரும் உணவு நானே."

அருள்மொழி :

அவர் அவற்றிடம், "போங்கள்" என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
மத்தேயு 8:32

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, கதரேன் பகுதிக்குச் சென்றார். இங்கு பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி, இறைமகனுக்கு எதிரே வந்து கொண்டிருந்தனர். இயேசுவைக் கண்டதும், “இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை?” என்றன. மேலும், “எங்களை ஒழிக்கவா வந்தீர்கள்” என்றன. “அப்படியானால் இந்தப் பன்றிக்குள் போக விடும்” என்று அச்சத்தில் புலம்பின. இதனைக் கண்ட இயேசு, “போங்கள்” என்றார். உடனே அனைத்துப் பேய் கூட்டமும் பன்றிக்குள் புகுந்து, உயரே இருந்து கீழே ஆழ்கடலில் வீழ்ந்து மூழ்கிப் போயின. ஆம், இறைசமூகமே தீய வாழ்வில் திளைத்தும், தன்னை மட்டும் அழித்துக் கொள்ளாமல், அடுத்தவரையும் அழிக்கும் சுயநலவாதிகள், பேராசை கொண்டவர்கள் நிலை இந்த வாக்கு “போங்கள்” என்ற நிலைக்கு நாம் தள்ளப்படாமல், நிலைவாழ்விற்குச் செல்ல முயற்சிப்போம்.

சுயஆய்வு :

  1. “போங்கள்” என்ற வரிகள் உணர்த்தும் செய்தி யாது?
  2. "வாருங்கள்” என்று இறைமகன் அழைப்புப் பெற என் முயற்சி யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, சோதனைகளைச் சாதனைகளாக்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org