ஜூலை, 3 - செவ்வாய்
இன்றைய நற்செய்தி

யோவான் 20:24-29

"நீ என்னைக் கண்டதனால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்."

அருள்மொழி :

இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்றார்.
யோவான்20:29

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, உயிர்த்த பின் தம் சீடர்களுக்குத் தோன்றுகின்றார். அப்போது பன்னிருசீடர்களில் திதீமு எனும் தோமா அங்கில்லை. எனவே சீடர்கள், “ஆண்டவரைக் கண்டோம்” என்றதை நம்பவில்லை. மற்றொரு நாள் இயேசு, சீடர்கள் அறையில் கூடியிருந்தபோது அங்கு அவர்கள் நடுவில் தோன்றி, “உமக்கு அமைதி உண்டாகுக” என்றார். அங்கிருந்த தோமாவை நோக்கி, “இதோ என் கைகள் - என் விலா. இங்கே உன் கைகளை இடு” என்றார். இதனைக் கண்ட தோமா, “என் ஆண்டவரே, என் தேவனே” என்று நம்பிக்கை ஒலியை எழுப்பினார். இயேசு, “தோமா, நீ என்னைக் கண்டதனால் நம்பினாய். காணாமல் நம்புவோர் பேறு பெற்றோர்” என்றார். காரணம் 2000 ஆண்டுகளைக் கடந்தும் இறைவாக்கு இவ்வுலகில் வலம் வருவதும், சீடர்கள்-புனிதர்கள்-வேத சாட்சிகளின் உடனிருப்பும் நம் இறைமகனின் பேரொளியும் உடன் பிரகாசிக்கின்றன. நமது நாட்டுப் பாதுகாவலர் விடுத்த வினா, நம் போன்றோருக்குச் சான்றாகும்..

சுயஆய்வு :

  1. தோமாவின் வினா உணர்த்தும் செய்தி யாது?
  2. ஆண்டவர் நமக்கு உணர்த்திய செய்தி யாது?

இறைவேண்டல்:

இறைவேண்டல்: அன்பு இயேசுவே, உம்மில் உறைந்து, உம்மோடு வாழும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org