ஜூலை, 1- ஞாயிறு
இன்றைய நற்செய்தி

மாற்கு 5:21-43

“மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு.”

அருள்மொழி :

034. இயேசு அவரிடம், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார்.
மாற்கு 5:34

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தொழுகைக் கூடத் தலைவரான யாயீர் என்பவரின் மகள் நோயுற்றுச் சாகும் தருவாயிலிருப்பதை இறைமகனிடம் முறையிட்டு, “நீர் வந்து தொட்டால் போதும், என் மகள் குணம் பெறுவாள்" என்று நம்பிக்கையுடன் கேட்டுக் கொண்டதன் பேரில், அவர்களோடு செல்லும்போது மக்கள் கூட்டம் நெருக்கிக் கொண்டு செல்கையில், பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்குடைய பெண், எந்த மருத்துவரும் கைவிட்ட நிலையில், இயேசு வருகின்றார் என்றதைக் கேள்வியுற்று, அக்கூட்டத்தினுள் புகுந்து, அவரது ஆடையைத் தொட்டால் போதும், நான் நலமடைவேன் என்று ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடுகிறாள். இறைமகனிடமிருந்து வல்லமை வெளியேறியதைக் கண்ட இயேசு, “யார் என் ஆடையைத் தொட்டது?” என்றபோது, அவள் நடுக்கத்துடன், “நான்தான்” என்றதும், "மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்று நம்பிக்கை ஒளியை நம் அனைவருக்குமே பதிவு செய்கிறார்.

சுயஆய்வு :

  1. இறைமகனின் வாக்கு என்னில் பதிந்துள்ளதா?
  2. எனது நம்பிக்கை எத்தகையது. உரசிப் பார்க்கிறேனா?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வார்த்தை என் வாழ்வாகிடும் வரம் தாரும். ஆமென். .


www.anbinmadal.org