arulvakku

ஜூன், 29

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 16:13-19

" இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன் "

அருள்மொழி:

உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா.
மத்தேயு 16:18

வார்த்தை வாழ்வாக:

யோவானின் மகனான சீமோனே நீ பேறுபெற்றவன்! நீ பாறை இப்பாறையின் மேல் என் திருச்சபையை கட்டுவேன். என்ற இயேசுவின் வார்த்தைகள் இன்று வரை பேதுருவில் உள்ளது. இயேசுவை மெசியாவாக காணும் அருள் பெற்றவர். தலைமைகுருவின் பணிபெண்ணிடம் இயேசுவை மூன்று முறை மறுதலிக்கவும் செய்தார். இன்று புனித பேதுரு,புனித பவுல் பெருவிழா. இயேசுவை துன்புறுத்திய சவுலை புதிய பார்வை பெற்று பவுலாக மாற செய்தார். இறைமகன் ஆண்டவர் பெயரால் இருவரும் போதிக்கவும் பேசவும் செய்தனர். புனித பவுல் ஆதிதிருச்சபையில் மக்களை சந்தித்து இராபகலாக உழைத்து தலதிருச்சபையை நிறுவினார். பேதுரு " பெந்தகோஸ்தே" பெருவிழா அன்று மூவாயிரம் பேருக்கு திருமுழுக்கு கொடுத்துத் திருச்சபையை தோற்றுவித்தார். ஆக இருவரின் விசுவாசம் மிகவும் ஆழ்ந்த விசுவாசமாகும். எனவே தான் இயேசு புனித பேதுரு என்ற பாறையில் தக் திருச்சபையைக் கட்டினார். புனித பவுல் ஆதிதிருச்சபைக்கு வலுயூட்டினார்.

சுயஆய்வு :

  1. திருச்சபையில் உண்மையான பற்றுறுதிக் கொண்டுள்ளேனா?
  2. திருச்சபையிலிருந்து விலகி செல்லும் மக்களை இனம் கண்டு அவர்களுக்கு நான் தரும் வளக்கம் என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உம்மந்தையை விட்டு விலகிச்செல்லும் ஆடுதளை ஒன்று சேர்க்க எனக்கு வலிமை தாரும். ஆமென்.


www.anbinmadal.org