ஜூன், 27

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 8:5-17

" பிற இனத்தவர் நம்பிக்கை"

அருள்மொழி:

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை.
மத்தேயு 8:10

வார்த்தை வாழ்வாக:

இயேசு இவ்வார்த்தைகளை யூத மக்களுக்காக ஒப்பிடுகின்றார். யூத மக்களைப் பாவசெயல்களிலிருந்து மீட்டெடுக்கவே யூதக் குலத்தில் பிறந்தார். ஆனால் அவர்களோ அவரை மெசியாவாக ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக நூற்றுவர்தலைவன் இயேசுவை உணர்கின்றார். தன் வேலையாள் நோய்வாய் பட்டிருக்கும்போது இயேசுவிடம் சொன்னால் சுகம் கிடைக்கும் என்று விசுவசித்தது அவன் நம்பிக்கையின் வெளிப்பாடு. இயேசுவே நீர் என் இல்லத்திற்கு வரவேண்டும். ஆனால் எனக்கு அந்தத் தகுதி இல்லை. ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் போதும் என்ற வேண்டுகோள் இயேசுவை மெய்சிலிர்க்கவைக்கிறது. பாரபரியம் மிக்க யூதர் அவவிசுவாசத்தை ஒப்பிட்டுதான் இவ்வாறு சாடுகிறார். இன்றும் கிறிஸ்துவர்கள் இயேசுவை அறியாமல் விசுவாசமின்மையால் திணறும் போது, பிறமதத்தினர் இயேசுவில் மனமாறப் பெற்று நம் தேவாலயங்களுக்குச் சாரைசாரையாக வந்து விசுவாசத்தோடு செபத்துப் பயன் பெறுவதை இன்று நாம் இன்று அதிகம் காணமுடிகிறது.

சுயஆய்வு :

  1. இயேசுவை முழுமையாக நான் புரிந்துள்ளேனா?
  2. பிறசமயத்தவரில் என் வாழ்க்கை எவ்வாறு சான்று பகிர்கின்றது?

இறை வேண்டல்:

இயேசுவே! நூற்றுவர் தலைவனும், பிறசமயத்தவரும் உம்மை உணர்ந்து கொள்வது போல், நானும் உம்மை உய்த்துணர வரம் தாரும்.ஆமென்.


www.anbinmadal.org