arulvakku

ஜூன், 5

இன்றைய நற்செய்தி:

மாற்கு 12:35-37

" தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” "

அருள்மொழி:

தாவீது அவரைத் தலைவர் எனக் குறிப்பிடுவதால் அவர் அவருக்கு மகனாக இருப்பது எப்படி?” என்று கேட்டார். அப்போது பெருந்திரளான மக்கள் இயேசு கூறியவற்றை மனமுவந்து கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
மாற்கு 12:37

வார்த்தை வாழ்வாக:

இயேசுவின் காலத்திலும் யூத மறைநூல் வல்லுநர்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மெசியா தாவீதின் மகனாக தாவீதின் குலத்திலிருந்து தோன்றுவார் என்பதை முழுமையாக நம்பினர். இன்றும் இயேசுவை மெசியா என்று நம்பவில்லை. மெசியா தாவீதின் குலத்திலிருந்து தோன்றுவார் என்று இன்றும் காத்திருக்கின்றனர்.இவர்களின் சந்தேகத்திற்கு இயேசு அன்றே பதில் கொடுத்துள்ளார். மெசியா தாவீதின் வழிதோன்றல்; பேரரசராய் இருப்பார். மெசியா அரசியல் விடுதலை கொடுப்பவர் என்று நம்பினர். ஆனால் மெசியா இறைமகன்; தந்தை இறைவனோடு வலப்பக்கம் அமர்ந்து அனைத்தையும் தன் ஆளுகையின் கீழ் கொண்டு இறையாட்சி நடத்துபவர். 'இருக்கிறவர் நாமே' என்னும் தன் தெய்வீக நிலையை அவர் கொண்டுள்ளார் என்ற எண்ணம் அவர்களில் இல்லை. இவ்வாறு ஆன்மீக விடுதலையை இலக்காகக் கொண்ட முழு மனித விடுதலையை நோக்கி மனிதனை நடத்துவார் என்று மெசியாவைப்பற்றி உணரத் தவறினர். தாவீதின் குலத்தில் மனிதனாக, இயேசுவாக பிறப்பார் என்னும் உண்மைளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. யூத மறைவல்லுநரின் மெசியாபற்றிய தவறான கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார்.

சுயஆய்வு :

  1. இயேசுவை மெசியா என்று உணருகிறேனா?
  2. தாவீதின் மகன் யார் என்று அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! தாவீதின் மகனே!! எங்கள் வாழ்க்கை அன்பின் வெளிப்பாடாக அமைந்திட அருள்தாரும். ஆமென்


www.anbinmadal.org