இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:30-37

“சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்று, என் தந்தையை ஏற்றுக் கொள்கிறார்.”

அருள்மொழி:

"இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னை மட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்" என்றார்.
மாற்கு 9:37

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, தம் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதாடிக் கொண்டுவருவதைக் கண்ணுற்ற இயேசு, அவர்களைக் கூப்பிட்டு, "உங்களில் ஒருவர் முதல்வராக விரும்பினால், அவர் அனைவருக்கும் கடையவராக இருக்கட்டும். மேலும், ஒரு சிறு பிள்ளையை எத்தகைய அடிமட்டத்திலிருந்தாலும் அதனை ஓடிச் சென்று தூக்கி அரவணைத்துச் சீராட்டி அக்குழந்தையைக் கவனிக்கும் எவரும் என்னையும் - என்னை அனுப்பியதந்தையையும் ஏற்றுக் கொள்கின்றார்” என்று பதிவு செய்கின்றார். காரணம், இறைமகனின் மண்ணக வருகை இத்தகைய ஏழை - எளியோர், புறந்தள்ளப்பட்டோர், சாதி - சமயத்தின் பெயரால் பிளவுபட்ட மனுக்குலத்தை ஒன்றிணைக்கவே, அவரது பிறப்பு மாட்டுத் தொழுவம். அதே வேளை, அவரது திருக்காட்சி நடுங்கும் குளிரில் வாடியவர்களுக்கே என்பதனை வானதூதர்கள் பாடினர்.

சுயஆய்வு :

  1. என் மனம் அனைவரையும் அரவணைக்கும் நிலையில் உள்ளதா?
  2. அவரது வருகையின் நோக்கம் அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது வருகையின் பொருள் உணர்ந்து வாழும் வரம் தாரும். ஆமென்.